சுமதியும்
என்னோடு விடுதியில் தங்கித்தான் படித்துக் கொண்டிருந்தாள். அதனால் எனக்கு அவளைப்
பற்றி நன்றாகத் தெரியும். அன்பானவள், பண்பானவள், நற்குணம் கொண்ட நல்ல பெண். அவளும்
நானும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எங்கள் குடும்பத்தினரை
பற்றி எதுவும் தெரியாது. அவள் என் குடும்பத்தினரோடு பேசியதும் இல்லை, பழகியது
இல்லை. அவ்வாறுதான் நானும்.
திடீரென
ஒரு நாள் அவளின் பெற்றோர் வந்து வீட்டில் தங்கிப் படிக்கும் படி அவளை அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
அதனால் எனக்கும் விடுதியில் தங்கிப் படிக்க விருப்பம் இல்லாமல் போயிற்று. என்
பெற்றோர் என்னை வீட்டில் தங்கிப் படிக்க அனுமதிக்கவில்லை.
எனக்கோ
விடுதியில் சுமதியைத் தவிர வேறு எவரோடும் பழகப் பிடிக்காது. காரணம் பெண்கள்
ஒன்றாய் சேர்ந்தால் அங்கு படிக்க முடியாது. எல்லோரும் சொல்வார்கள் ஆண்கள் ஒன்றாய்ச்
சேர்ந்தால் அவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள்
என்று. ஆனால் பெண்கள் ஒன்றாய் சேர்ந்தால் அவர்களும் கெட்டுப்போய்விடுவார்கள்
என்பதை யாரும் இன்னும் கூறியதில்லை. விடுதி வாழ்க்கையில் சுமதி இருந்த காலம்
எனக்கு பொன்னானது. ஆனால் அவள் பிரிந்து சென்றதில் இருந்து நான் தனிமரமாய் தவித்து
நின்றேன். அப்போ என் நிலமையை என் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை.
பெற்றோரின் ஆசைப் படி விடுதியிலே தங்கிய நான் விடுதியில் உள்ள தோழிகளோடு
நெருங்கிப் பழகினேன். அவர்களோ.........!!!!!!!!!!!!!!!!...( வெளிச்சம் தேடி பயணம்
தொடரும்...1)